ஞாயிறு, மார்ச் 25, 2018

இரகசியம் திரை விலக்கப்படுகிறது...!

பொதுவாக ஒரு பிரச்னை எனக்கு எப்படி உருவாகிறது என்று யோசிக்கும் போது, ஏதோ ஒரு நபர் மூலமாகவோ அல்லது ஒரு சூழ்நிலையாலோ வருவதை உணரமுடிந்தது. இந்த இரண்டின் மூலமாக வரும் இன்பமான உணர்வை பற்றி எனக்கு பெரிய கேள்வி ஏதுமில்லை (இன்ப உணர்வில் இருக்கும் போது ஏன் நான் மட்டும் இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறேன் என்று கேள்வி ஏழாது. எந்த சாமியார பின்னாடியும் நாம் செல்லமாட்டோம். யாருடைய தீட்சையும் நமக்கு தேவைப்படாது. ). ஆனால் இந்த இரண்டின் மூலமாக ஏதாவது துன்பம் தரும் விஷயம் நடந்தால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியும். 

நீண்ட காலமாக இந்த விஷயத்தை கவனித்து வரும்போது இது இல்லாமல் மூன்றாவதாக ஒரு விஷயத்தால் தான் நமக்கு பிரச்னை வருகிறது என்று எனக்கு புலப்பட்டது. இங்கு  என்னை நான் ஒரு ஐஸ் கட்டியாக நினைத்துக்கொள்வேன்.  இப்போது ஒரு சூழ்நிலையாலோ அல்லது ஒரு நபராலோ எனக்கு துன்பம் வருவதாக இருந்தால் நான் நேரடியாக அந்த நபரையோ அந்த சூழலையோ முடிந்தவரை குறை கூறாமல் 360 டிகிரியில் என்னை கவனிக்கும்போது தான் அந்த விஷயம் புலப்பட்டது. இன்னும் தெளிவாக சொல்கிறேன்.

ச்சே! சில பேரை பார்த்தாலே எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது. இவனெல்லாம் எதற்கு உயிரோடு இருக்கிறான். அப்போது அதை காணும் கண் இல்லை என்றால் இதனால் வரும் துன்பம் என்னை பாதிக்காது. ச்சீ! இந்த மாதிரி பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த மாதிரி வார்த்தைகளை என்னால் தாங்கமுடியாது. இப்போது கேட்கும்திறன் எனக்கு இல்லையென்றால் இது ஒரு பிர்சனையாக உருவெடுக்காது. இப்படி ஒவ்வொரு விஷயமாக களைந்து விட்டு வரும்போது கடைசியாக நாம் பிணமானால் எந்த பிரச்னையும் இருக்காது என்று வந்து முடியும். ஆனால் இதற்கு இடைப்பட்ட ஒரு இடத்தில் ஒரு இரகசியம் புதைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது.

இந்த இடத்தில் நான் மறுபடியும் அந்த ஐஸ்கட்டி இடத்திற்கே வந்து விடுகிறேன். ஒரு சூழலோ அல்லது நபரோ என்னை பிரச்னைக்குட்படுத்தும் போது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி கவனிக்கும் போது அது கொஞ்சம் உருகுவதை நான் நன்றாக உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அது உருகி உருகி பிரவாகமாக மாறுவதை உணர்ந்தேன். எப்போது என்னுடைய ஐஸ்கட்டிக்கு அடி விழுகிறது என்று ஆர்வமாக கவனித்த போது நான் மிகவும் நேரம் எடுத்து செலவு செய்யும் விஷயத்தை பற்றி யாராவது ஏதாவது சொன்னாலும், நாம் ஒரு விஷயத்தில் தீவிரமாக நம்பிக்கை வைத்து இருக்கும்போது அதை பற்றி மற்றவர் மட்டமாக சொல்லும்போதும் எனக்குள் பற்றி எரியும். இது மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும். எனக்கு பற்றி எரிகின்ற விஷயம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். உங்களுக்கு பற்றி எரிகிற விஷயம் எனக்கு சாதாரணமாக இருக்கும்.(மனிதர்களுக்கு மனிதர் மாறுபடுவதால் தான் பல பதிவுகளாக நம் கண்முன்னே கொட்டி கிடக்கிறது. வாழ்க்கையின் சுவாரசியமே இந்த முரண்பாடுதான்.)

அப்போது இதற்கு பின்னால் என்ன இரகசியம் ஒளிந்து உள்ளது என்று தீவிரமாக கவனிக்கும்போது, உதாரணத்திற்கு நான் ஒரு பெயர் சொல்ல விரும்பாத (அதை வைத்து ஒரு பெரிய அரசியல் விளையாட்டே நிகழும்) கடவுளை தீவிரமாக நேசிக்கிறேன் என்று வைத்துகொள்ளுங்கள். அந்த கடவுளை யாராவது விமர்சித்தால் எனக்கு கடும்கோபம் வரும். நிதானமாக யோசிக்கும்போது அது கரையும். நான் எந்த அளவுக்கு அதன் மீது பற்றுவைத்துள்ளேனோ அது வரை எனக்கு அடி விழுந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் அது பிரவாகமாக மாறும். அப்போது என் கடவுளை யார் எது சொன்னாலும் எனக்கு துன்பம் வராது. 

அப்போ என் வாழ்க்கையில் நான் எங்கெல்லாம் பற்று வைத்துள்ளேனோ அங்கு சூழ்நிலையாலோ மனிதர்களாலோ வலியாக (கவனிக்காத போது அது வலியாகவும், கவனிக்கும் போது நமக்கு இன்பமாகவும்) அடையாளம் காட்டப்படுகிறது. அதை கவனிக்கு போது அது பிரவாகமாக மாறிவிடுகிறது. ஒரு நேரம் வரும். உயிர் உடலில் இருக்கும்பொழுதே யாராலும் எந்த சூழ்நிலையாலும் உங்களை பாதிக்காத தருணம் வரும். அப்போது நீங்கள் பிரவாகமாகிவிட்டிருப்பீர்கள்...

நன்றி
சுரேஷ் மாணிக்கம்

வெள்ளி, அக்டோபர் 12, 2012

ஆரோக்கியம் - சில தகவல்கள் 7சர்வரோக நிவாரணி - கோதுமைப் புல்

 
எல்லாப் பசுமையான செடி கொடிகளிலும்
குளோரோஃபில் இருக்கிறது என்றாலும்
கோதுமைப் புல்லில் இருப்பது தனி அதிசயம்.

  • அதாவது மனித இரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹெமின் என்ற பொருளும் கோதுமைப் புல்லின் குளோரோஃபிலும் ஏறத்தாழ ஒரே அணுக் கட்டமைப்பில் இருப்பதுதான்.
  • நமது இரத்தத்தின் காரத்தன்மை, கோதுமைப் புல்லின் காரத்தன்மையும் ஒன்றாக இருக்கிறது. நமது இரத்தத்தின் மூலக்கூறு எண்ணும் கோதுமைப் புல் சாறின் எண்ணும் ஒன்றாக இருக்கிறது. 
  • இதனை குடித்த உடன் நம் இரத்தத்தில் உடனடியாக சேர்ந்து விடுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி வெளியே தள்ளுகிறது.
  • இதில் உள்ள வைட்டமின் B17 (Laetriel) புற்றுநோயைக் குணப்படுத்தும் ஒரே வைட்டமின் இதுதான். 
  • 23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்க கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் இருப்பது அதிசயம்.
  • இதில் இருக்கும் குளோரோஃபில்லில் இருக்கும் உயிருள்ள என்சைம்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை தேடி அழிக்கக் கூடியது.
 
 

சனி, ஜூலை 07, 2012

உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம்...

"நமது சமுதாயத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மருத்துவர்கள், நம்மை முற்றிலும் நிலைதவறி போகும்படி செய்து விட்டனர். நோய்கள் எவ்விதம் உருவாகின்றன? நிச்சயமாக நமது அசட்டையினாலோ அல்லது மிதமிஞ்சிய போகங்களினாலோ நோய்கள் உருவாகின்றன. நான் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிறேன். எனக்கு அஜீரணம் உண்டாகி, மருத்துவரிடம் போகிறேன். மருத்து கொடுக்கிறார்; குணம் அடைகிறேன். மறுபடியும் நான் அதிகமாக உணவு உட்கொள்கிறேன். மருத்துவரின் மருந்தையும் உட்கொள்கிறேன். ஆனால், முதல் தடவையிலேயே மருந்தை உட்கொள்ளாதிருந்தால், எனக்கு உரிய தண்டனையை அனுபவித்திருப்பேன். மறுபடியும் மிதமிஞ்சி உண்டிருக்க மாட்டேன். மருத்துவர் குறுக்கிட்டு, மிதமிஞ்சி நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். மருத்துவர் தலையிடாமல் இருந்திருந்தால், இயற்கை தன் வேலையை செய்திருக்கும். என்னை நானே அடக்கியாளும் ஆற்றலும், எனக்கு உண்டாகியிருக்கும்.

மகாத்மா காந்தி

உங்களுக்கு ஓரு இரகசியம் தெரியுமா?

நமக்கு உடல் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நம் உடல் இலேசாக இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  நம் உடலில் ஏதாவது ஏற்பட்டுவிட்டால் மனம் அதை பற்றியே சிந்தனையில் இருக்கும். சரியானவுடன் அதைபற்றி மறந்துவிடும்.
நம் உடலோ மனமோ அடிப்பட்டுவிட்டால் அதைச் சுற்றியே நம் முழு ஆற்றலும் பாயும்.

உங்களுக்கு ஓரு இரகசியம் தெரியுமா? உடலில் எந்த நோய் இருந்தாலும் அதை மருந்து கொடுத்து சரி செய்யும் காலத்தைவிட, அதை தொந்தரவு செய்யாமல் இயற்கையிடமே விட்டுவிட்டால் ஆகும் காலம் குறைவு.

இப்பொழுது நம் உடலில் நோய் வந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். உடல் சார்ந்த பிரச்னை என்று எடுத்துகொண்டால் வலி, மருந்துகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடும் முயற்சிகள். மனம் சார்ந்தது என்றால் அந்த நோயை பற்றிய பயம். அதைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் கருத்துக்கள். மற்றவர்கள் கூறிய சில தகவல்கள். இவை அனைத்தும் அந்த நோயை அதிகப்படுத்துகின்றன.

இது நோய்க்கு மட்டுமல்லாமல், கடந்தகால மனக்காயங்கள், அவமானங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதும், அக உணர்ச்சிகளை நாம் கையில் எடுத்துக்கொண்டு சரிசெய்ய முற்படுவதும் தான் பிரச்னையே தவிர. அது குறித்து நாம் எதுவும் செய்யாமல் (உள் நிலையில் மட்டும்) இருந்தாலே போதுமானது.

எனக்கு நோய் வந்துவிட்டது. நீங்கள் சொல்லியபடி எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து இருக்க சொல்கிறீர்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த கேள்வி உங்கள் மனதில் எழுந்தால் இதை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் வெளி சார்ந்து எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். அதனால் ஏற்படும் உள்நிலை (சோதனைகள் / அவமானங்கள் / கோபம் இன்னும் பிற...) சார்ந்த உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதுகுறித்து விவாதிக்கவோ மறுபரிசீலனை செய்யவோ வேண்டாம். அதனால் எந்த பயனும் இல்லை. மாறாக குழப்பமே மிஞ்சும். உள்நிலையில் நீங்கள் செய்யவேண்டிய ஒரே விஷயம் வெளிநிலையில் நீங்கள் செய்யவேண்டிய வேலையை திறம்பட செய்ய நீங்கள் உள்நிலையை பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வளவுதான்.

நடந்தது நடந்தது தான்; முடிந்தது முடிந்தது தான்; அதை மாற்றி அமைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு அதனோடு முரண்படாமல் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மனம் இலேசாகிவிடும். மனம் இலேசாகிவிட்டால் உடலும் புத்துணர்வோடு இருக்கும். இயற்கைதான் பெரியது என உணர்ந்து சரணாகதி செய்வது மட்டுமே போதுமானது. நீங்கள் பரிபூரண ஆரோக்கியவானாக மாறிவிடலாம். எனவே ஆரோக்கியமாக வாழ்வதும் மன நலத்தோடு வாழ்வதும் அதிசுலபம் தான்.

சுரேஷ் மாணிக்கம்

ஆரோக்கியம் - சில தகவல்கள் 7

கேன்சர்... உங்கள் கவனத்துக்கு!

நல்ல உணவுப் பழக்கத்தால் கேன்சரே வராமல் தடுத்துவிட முடியுமா?'' என்ற கேள்விக்கு, 'முடியும்'. அது எப்படி முடியும்?

உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

* கேன்சரை உண்டாக்கக் கூடிய மோசமான உணவுகள்.

* கேன்சர் அபாயமற்ற நல்ல உணவுகள்.

* கேன்சரைத் தடுக்கும் / குணமாக்கும் அற்புத உணவுகள்.

கேன்சரை உண்டாக்கும் உணவுகள்...

பலமுறை உபயோகித்த எண்ணெயிலயே மீண்டும் வறுக்கப்பட்ட/ பொறிக்கப்பட்ட பதார்த்தங்கள், அதிக காரம்/ எண்ணெய்ப்பசை கொண்ட கவர்ச்சிகர உணவுகள், துரித உணவு வகைகள், 'ஜங்க் ஃபுட் நொறுக்குத் தீனிகள்' என விரிகிறது பட்டியல்.சுருக்கமாகச் சொல்வதானால், ஜீரணிக்கக் கடினமான 'ஹெவி' உணவுகள் அனைத்துமே கேன்சரை விளைவிக்கக்கூடிய ஆபத்து உள்ளவைதான். உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் இந்த உணவுகளில் நிறைந்துள்ளன. உணவில் உள்ள எல்லா சத்துக்களையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நம் உடல், இந்தக் கொழுப்பு விஷயத்தில் மட்டும் குழப்பம் அடைந்து, அவற்றை தனியே சேர்த்து வைக்கிறது. அத்துமீறி ஒரு நாட்டுக்குள் அந்நியர் புகுந்துவிட்டால், நாட்டுக்கு கெடுதல்தான் செய்வார்கள். அதையேதான் அந்தக் கொழுப்புகளும் நம் உடலுக்குச் செய்கின்றன. கேன்சர் வரைக்கும் போய்விடுகிறது.

எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சமையல், நீராவியில் வேக வைக்கப்பட்ட பதார்த்தங்கள் போன்றவை கேன்சர் ஆபத்தற்ற உணவாகக் கொள்ளலாம்.

கேன்சரைத் தடுக்கும் அற்புத உணவுகள்...

இவற்றைப் பற்றிச் சொல்லும் முன்னர் கேன்சர் எப்படித் தோன்றுகிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

ஹார்மோன்களின் தூண்டுதலால் அல்லது உடலுக்குத் தேவையற்ற கொழுப்பு மற்றும் புகையிலையில் இருந்து வரும் நிக்கோடின் என்ற பொருளின் தூண்டுதலால் கேன்சர் வரும். அவ்வளவுதானே?' என்று உங்களில் பலர் நினைக்கலாம். ஹார்மோன் உள்ளிட்ட விஷயங்கள் தூண்டுகிறதென்றால், அவை நம் உடலில் உள்ள கோடானுகோடி செல்களையும் தூண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறிவிடக் காரணம்? அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

நம் உடலின் செல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத்தான் இருக்கும். ஆனால், ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டிருக்காது. அவற்றுக்கு இடையே இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் (Inter cellular matrix) எனப்படும் திடப்பொருள் சூழ்ந்திருக்கும். வானத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல இந்த திடப்பொருளில் செல்கள் இறைந்து கிடக்கின்றன. எனவே, செல்களைக் 'கட்டி'க் காப்பது இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ்தான். அன்பான கூட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளை, பாதை மாறி தவறான காரியங்களில் ஈடுபடுவது அரிது இல்லையா? அப்படித்தான்... இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் ஆரோக்கியமானதாக இருந்தால் அவற்றில் கலந்துள்ள செல்களும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறாது. அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவுகின்றன.

இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் என்ற அந்தப் பொருள், 1. விட்டமின் 'ஏ' 2. விட்டமின் 'சி' 3. விட்டமின் 'ஈ' 4. செலேனியம் 5.கால்ஷியம் என ஐந்து விதமான தாதுப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் நான்காவதாகச் சொல்லப்பட்டிருக்கும் செலேனியம்தான் மிக முக்கியமான பொருள். சொலேனியம் போதுமான அளவு ஒருவர் உடலில் இருந்தால், அவருக்கு எந்தக் கட்டத்திலும் கேன்சரே வராது என அடித்துச் சொல்லலாம். உலக அளவில் 'பிரேசில் நட்' எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் செலேனியம் இருக்கிறது. அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் கொண்டது. காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.

செலேனியம் தவிர, கேரட்டில் உள்ள பீட்டாகெரோட்டின் (Betacarotene) என்ற பொருளில் விட்டமின் 'ஏ' அதிகம் உள்ளது. ஆப்பிள், தக்காளி, நெல்லிக்காய், இஞ்சி, பயத்தம் பருப்பு போன்றவற்றில் விட்டமின் 'சி' உள்ளது. பீட்ரூட், ஆல்மண்ட் அல்லது பாதாம் ஆயில், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றில் விட்டமின் 'ஈ ' உள்ளது. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்ஷியம் உள்ளது.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நாம் நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால், உலகில் கேன்சர் என்ற சொல்லே இருக்காது!

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

ஆரோக்கியம் - சில தகவல்கள் 6

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டசத்துக்குறைவினாலும் நோய்கள் ஏற்படுகின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில பலகீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது, மது, போதைப் பொருள் பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

இந்த எதிர்ப்பு சக்தி பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செயல்படுகின்றன. 

இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக் கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவைகள் தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 

இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும். இரண்டாவது வகையான எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். 

இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது லிம்போ டைடஸ் என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள். மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல்.
உதாரணமாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்புசக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டனஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

நன்றி : செவி வழி தொடு சிகிக்சை

WARNING...!

Women should not drink bottled water that has been left in a car. The heat reacts with the chemicals in the plastic of the bottle which releases dioxin into the water. Dioxin is a toxin increasingly found in breast cancer tissue. So please be careful and do not drink bottled water that has been left in a car.
Pass this on to all the women in your life. This information is the kind we need to know that just might save us!
Use a stainless steel canteen or a glass bottle instead of plastic!*
LET EVERYONE WHO HAS A WIFE / GIRLFRIEND / DAUGHTER KNOW PLEASE!