செவ்வாய், பிப்ரவரி 28, 2012

தேடல்..! முடிவான தேடல்..! (1)

மகாவீரர், தம் முழு தர்க்கத்தையும் 7 படிநிலைகளாகப் பிரித்தார். "தர்க்கத்தின் 7 அம்சங்கள்" என்று அதற்கு பெயர். மகாவீரரிடம் நீங்கள் ஒரு வினா தொடுத்தால், அவரிடமிருந்து 7 பதில்கள் வரும்! நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள் - அவர் உடனடியாக 7 பதில்கள் கொடுப்பார். அது மிகவும் குழப்பமாக இருக்கும்.

ஒரு வினாவுக்கு 7 பதில்கள் கிடைத்தால் குழப்பம்தான். முன்பு இருந்ததைவிட குழப்பம்தான் மிஞ்சும். 7 பதில்களை கொண்டு அவரைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

நீங்கள் மனதால் கேட்பீர்கள். நானும் மனதால் விடை சொன்னேன். மனம் எதையும் 7ஆக பிரிக்கத்தானே செய்யும்? என்று தான் கூறுவார். அவர் கூற்று சரியானதுதான். அந்த 7 விடைகளும் ஒன்றோடு ஒன்று முரண்படும்! அப்படித்தானே இருக்கமுடியும்? உண்மை ஒன்றாயிற்றே! உண்மை 7ஆக இருக்க முடியாதல்லவா?

கடவுள் இருக்கிறாரா என்று மகாவீரரிடம் கேட்டால், "ஆமாம். கடவுள் இருக்கிறார்" என்பார். "இல்லை. கடவுள் இல்லை" என்றும் சொல்வார். அப்புறம், "உண்டு - இல்லை, இரண்டுமே"; "கடவுள் இருக்கவும் செய்கிறார், இல்லாமலும் இருக்கிறார்" என்பார். பிறகு, "இரண்டும் இல்லை" என்பார். இப்படியே 7 விதம் வரை அவர் போய்க்கொண்டே இருப்பார். 

ஒரு சாதாரண மனிதரிடம், கடவுள் உண்டா இல்லையா? என்று கேட்டால், அதற்கு, "உண்டு அல்லது இல்லை" என்ற இரண்டு பதில்தான் இருக்க முடியும் என்பார். அவர் கவனமாக இல்லாததால் ஐந்தை இழந்து விடுகிறார். பலவற்றின் ஆரம்பம் இரண்டல்ல ஏழு. அகவே,
பலவற்றின் ஆரம்பம் 2. பலவற்றின் முடிவு 7.

தேடல் தொடரும்...!
_____________________________________________________________________

போன அத்தியாயத்தில் "அனுஷ்டான ஆன்மீகம்" புத்தகத்தை தரவிறக்கம் செய்து படித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதில்
"ஆன்ம ஞான இரகசியம்" என்ற சுட்டியை இணைத்துள்ளேன்.

http://pravaagam.org/7512@34(9@14/Anma%20Gana%20Ragasiyam%20Book.zip

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

தேடல்..! முடிவான தேடல்..!



பல விதமான குழப்பங்களையும், தேடல்களையும் தீர்த்து வைக்கிறது இந்த புத்தகம். இதை முதலில் படித்து பாருங்கள். இந்த புத்தகத்தின் முன்னுரையில் கூறியது போல் பாவித்து இந்த புத்தகத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



http://pravaagam.org/7512@34(9@14/anushtana%20anmegam.zip


முதலில் இந்த புத்தகத்தோடு ஆரம்பிப்போம். படிப்படியாக சில தகவல்களை அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்.