வெள்ளி, மார்ச் 02, 2012

என் ஜன்னலின் வழியே தெரிந்த வானம்...!

மிகச் சிலரே புரிந்து கொண்ட புத்தரின் கருத்து

  • அசையும் போது அங்கே அசைவு மட்டுமே உள்ளது; அங்கே அசைபவர் இல்லை.
  • பேசும் போது பேச்சு மட்டுமே உள்ளது; பேசுபவர் இல்லை.
  • கேட்கிறபோது கேட்டல் மட்டுமே உள்ளது; கேட்பவர் இல்லை.

************************************************************************************

ஒருவர் கூறினார்:
கொடி அசைந்து கொண்டிருக்கிறது
அடுத்தவர் கூறினார்:
காற்று அசைந்து கொண்டிருக்கிறது
குரு கூறினார்:
மனம் அசைந்து கொண்டிருக்கிறது

************************************************************************************

யாராவது உன் மேல் கோபம் கொண்டால், அதற்கு உடனே பதிலாக எதுவும் செய்யாதே; சண்டை போடாதே. அவன் சொல்வதை கவனமாக கேள். பிறகு அவனிடம், "நீங்கள் கூறியதைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள். பிறகு தகுந்த பதிலுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்" என்று கூறவும்.
[மாபெரும் குருவான குருட்ஜிப்பின் தந்தை அவருக்கு கூறியது]

************************************************************************************