சனி, நவம்பர் 05, 2011

MINUSCULE

"Minuscule" இந்த வார்த்தையை வைத்து
YOU TUBE-ல் தேடினால் பூச்சிகளின் வாழ்க்கையை அருமையாக அனிமேஷன் பண்ணியிருக்கிறார்கள். கிழே உள்ள வீடியோவை பாருங்கள். இது மாதிரி நிறைய கிரியேட்டிவிட்டியோடு செய்திருக்கிறார்கள். அநேகமாக சில அனிமேஷன்ஸ் உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
 

வெள்ளி, நவம்பர் 04, 2011

ஊழலை ஒழிக்க ஒரு எஸ்.எம்.எஸ். போதும்!


ஊழலை ஒழிக்க ஒரு எஸ்.எம்.எஸ். போதும்!
சொல்கிறார் ஒரு பள்ளி மாணவர். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை தொடர்பு கொள்ளுங்கள்.

http://www.corruptionfree.in/

இது ஏதோ ஓரு குறும்படம் என்று நினைத்து விடாதீர்கள்...! இது உண்மையான பதிவு...!


உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்? அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி: யாழினியன் அனுப் மற்றும் கிருபாகரன்